இது எனது வலைப்பதிவு

இந்த வலைப்பதிவில் அதிகபட்சமாக தமிழக கோவில்௧ள் பற்றிய வரலாற்று த௧வல்௧ளை பதிவு செய்ய நினைத்துள்ளேன்....

மேலும் சில என்ன சிதறல்களும்...

எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

இனி பதிவுகள்...

Tuesday, August 24, 2010

வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !


சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !


சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?


சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

அன்புடன் கிருபா.

Friday, August 20, 2010

கோயில்கள் இறைவனின் உறைவிடமாக மட்டும் அமையாமல் கலைகளோடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் யாவற்றையும் புலப்படுத்தும் கலைக்கூடங்களாகத் திகழ்கின்றன. இத்திருக்கோயில்கள் இலக்கியம், அரசியல், சமயநிலைகள், சமுதாய அமைப்பு, பொருளாதாரம், வாழ்வியல் முறைகள், கலைகளின் வளர்ச்சி என்று ஒரு நாடு பற்றிய அத்தனை செய்திகளையும் அடுக்கடுக்காய் வழங்கும் கல்வெட்டுகளைச் (1) சீராக அழகுபடப் புறச்சுவர்களில் செதுக்கியிருப்பதை இன்றும் காணலாம்.

courtesy
www.varalaaru.com
அன்புடன் உணவூட்டி
அழகாய் உடையுடுத்தி
செல்லமாய் அதட்டி
பக்கத்தில் படுக்கவைத்து
குழந்தை காட்டுகிற அன்பில்
உயிர் பெற்றுவிடத் துடிக்கிறது
பொம்மை.

http://blog.arutperungo.com

Saturday, February 21, 2009

புரிதல்

சரளமாய் பேசிக்கொண்டிருக்கிறாய்
சங்கீதமென.
சட்டென நிறுத்தி சில கேள்வி கனைகள்
கீதம் நின்றுவிட வேண்டாமென்று
அதற்க்கும் பதிலளிக்கிறேன்.

*******

வெக்கை தனிந்து
குளிர் நிறைந்த மாலை நேரம்
என் முன் மேஜையில்
ஆறிய தேநீர் கோப்பை.

நீ இல்லாமல்
காத்திருதலும் ஒரு சுவை...

********

சுற்றுலா செல்கையில்
என்னவெல்லாம் எடுத்து செல்வாய்?
விழிகளில் தேடல்
கூந்தலில் தென்றல்
இதழ்களில் மவுனம்
மனதினில் மகிழ்ச்சி
எண்ணங்௧ளில் புரட்சி
சரியா?

Monday, December 1, 2008

காலைப்பனி

அவ்வளவு சிரமம் ஒன்றுமில்லை
ஒரு கவிதையை நேசிக்கும் பொழுது
கவிதை எழுதுவதென்பது.

இப்படி ஆரம்பிக்கலாம்...
நான் வாழ்வை உணர ஆரம்பித்த நாட்களை (பள்ளிக்குரும்புகள் ஆரம்பித்த நாட்கள்)
சில்லென்ற குளிரையும் கனவு௧ளையும்
கதகதப்பான போர்வைக்குள் உணர்ந்த நாட்௧ள்
ஆகவே தலைப்பு "காலைப்பனி"

Tuesday, October 28, 2008

கோவில்

சுற்றிவருகையில் நந்தவனத்தில்
பார்த்துப்பார்த்து பூக்கள் பறித்தேன்
கருவறை முன் உன்னை
ப் பார்த்ததும்
மாற்றி கட்டளை இட்டது மனது
பூக்களை உனக்கு அர்சிக்க சொல்லி...

******

நடந்து சென்று குளத்து
படிக்கட்டில் அமர்ந்தாய்,
ஓடிவந்து உன்பின் நின்றேன்
நீரில் நம் நிழல்.

******

கொடிமரத்தின்முன் மன்டியிட்டாய்
கடவுளின் மீது இன்னும் மதிப்பு கூடியது..
எனக்கு.

Tuesday, September 30, 2008

கடிதம்

எழுதினேன் உனக்கொரு
காதல் கடிதம்...
வர மறுத்தன கற்பனை௧ள்
நிகழ்ந்தவை அனைத்தும்
நிஜம் என்பதால்...