இது எனது வலைப்பதிவு

இந்த வலைப்பதிவில் அதிகபட்சமாக தமிழக கோவில்௧ள் பற்றிய வரலாற்று த௧வல்௧ளை பதிவு செய்ய நினைத்துள்ளேன்....

மேலும் சில என்ன சிதறல்களும்...

எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

இனி பதிவுகள்...

Monday, December 1, 2008

காலைப்பனி

அவ்வளவு சிரமம் ஒன்றுமில்லை
ஒரு கவிதையை நேசிக்கும் பொழுது
கவிதை எழுதுவதென்பது.

இப்படி ஆரம்பிக்கலாம்...
நான் வாழ்வை உணர ஆரம்பித்த நாட்களை (பள்ளிக்குரும்புகள் ஆரம்பித்த நாட்கள்)
சில்லென்ற குளிரையும் கனவு௧ளையும்
கதகதப்பான போர்வைக்குள் உணர்ந்த நாட்௧ள்
ஆகவே தலைப்பு "காலைப்பனி"

Tuesday, October 28, 2008

கோவில்

சுற்றிவருகையில் நந்தவனத்தில்
பார்த்துப்பார்த்து பூக்கள் பறித்தேன்
கருவறை முன் உன்னை
ப் பார்த்ததும்
மாற்றி கட்டளை இட்டது மனது
பூக்களை உனக்கு அர்சிக்க சொல்லி...

******

நடந்து சென்று குளத்து
படிக்கட்டில் அமர்ந்தாய்,
ஓடிவந்து உன்பின் நின்றேன்
நீரில் நம் நிழல்.

******

கொடிமரத்தின்முன் மன்டியிட்டாய்
கடவுளின் மீது இன்னும் மதிப்பு கூடியது..
எனக்கு.

Tuesday, September 30, 2008

கடிதம்

எழுதினேன் உனக்கொரு
காதல் கடிதம்...
வர மறுத்தன கற்பனை௧ள்
நிகழ்ந்தவை அனைத்தும்
நிஜம் என்பதால்...

Monday, September 22, 2008

Tanjavore-The truths


  • இராஜராஜீசுவரம் விமானத்தின் நிழல் கோயில் வளாகத்திற்குள் விழாது
    • தவறு. நாள்தோறும் விழுகிறது

  • இராஜராஜீசுவரம் விமானத்தின் உச்சித்தளம் ஒரே கல்லால் ஆனது. அதன் எடை 80 டன்.
    • தவறு. பல கற்களால் ஆனது.

  • இராஜராஜீசுவரம் விமானத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனது. அதன் எடை 80 டன்.
    • தவறு. சிகரம் பல கற்களால் ஆனது

  • தனக்கிருந்த கருங்குஷ்டம் நோய் சரியாவதற்காகவே இராஜராஜர் கோயில் கட்டினார்.
    • தவறு. இராஜராஜருக்கு எந்த நோயும் இருந்ததாக வரலாறு கூறவில்லை

  • இராஜராஜரின் குரு கருவூர்த்தேவர் துபிய வெற்றிலை எச்சிலால் இக்கோயில் இலிங்கம் நிலைநின்றது.
    • தவறு. கருவூர்த் தேவருக்கும் இராஜராஜருக்கும் தொடர்பிருந்ததாக வரலாறு கூறவில்லை.

  • ஓவியக் காட்சியில் இராஜராஜரும் அவர் குரு கருவூர்த்தேவரும் உள்ளனர்.
    • தவறு. அக்காட்சியில் இருப்பவர்கள் அவர்கள் அல்லர். இராஜராஜருக்கும் கருவூர்த்தேவருக்குமோ, இராஜராஜருக்கும் கருவூராருக்குமோ தொடர்பிருந்ததாக எந்தத் தகுதியான சான்றும் யாராலும் இதுநாள்வரையிலும் முன்வைக்கப்படவில்லை

  • இராஜராஜீசுவரம் விமானம் பொன் தகடுகளால் போர்த்தப்பட்டிருந்தது.
    • தவறு. தகுதிவாய்ந்த சான்றுகள் ஏதும் இல்லை

  • உடையாளூரில் இராஜராஜருக்குப் பள்ளிப்படை உள்ளது.
    • தவறு. அங்கிருப்பது ஒரு கல்வெட்டு. அக்கல்வெட்டு இராஜராஜர் பெயரால் இருந்த கட்டமைப்புப் பற்றீ மட்டுமே கூறுகிறது

  • இராஜராஜீசுவரம் விமானத்திலிருந்து குதித்து இராஜராஜர் தற்கொலை செய்து கொண்டார்.
    • தவறு. சான்றுகள் இல்லை

  • ****


"நாம் கொடுத்தனவும்" கல்வெட்டு

இராஜராஜனின் மிகப் பிரபலமான நாம் குடுத்தனவும் கல்வெட்டைப் படித்தே ஆகவேண்டுமென்று ஒரு கோஷ்டி கொடியைப் பிடிக்க, மேற்குப் பகுதிக்குச் சென்றோம். அங்கே - கருவறையின் மட்டத்திற்கு சற்று கீழ் அழகாக வெட்டப்பட்டிருந்தது அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வெட்டு. இராஜராஜனின் மிக உத்தமமான மனதிற்கும் உயர்ந்த சிந்தனைக்கும் அந்த ஒரு கல்வெட்டு மட்டும் போதும்!

அந்தக் கல்வெட்டில் மன்னன் கீழ்க்கண்டவாறு சொல்கிறான் -

"நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும்...இந்தக் கல்லிலே வெட்டியருளுக என்று திருவாய்மொழிஞ்சருளி....."

அதாவது தட்சிண மேரு விடங்கர்க்கு யார் எந்தவிதமான காணிக்கை அல்லது நிவந்தம் செய்திருந்தாலும் - அது சிறியதோ பெரியதோ - கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிட வேண்டும் ! அவருடைய பதவி ஒரு பொருட்டல்ல, அவர் அரசனுக்கு அணுக்கமானவரா, இல்லையா என்பது பொருட்டல்ல, சோழவம்சத்தை சேர்ந்தவரா இல்லையா என்பதும் ஒரு பொருட்டல்ல - அவர் யாராயிருந்தாலும் சரி, இறைவனுக்கு காணிக்கை கொடுத்தவர் என்கிற அளவில் அவர் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிட வேண்டும் - அவ்வளவுதான் !

நமது இந்திய வரலாற்றை தலைகீழாகப் புரட்டிப் பார்த்தாலும் இப்படி தன்னைச் சேர்ந்தவர்கள், தான் முனைந்த காரியத்திற்கு உறுதுணையாய் நின்றவர்கள் என்று அனைவரையும் "கொடுப்பார் கொடுத்தனவும்" என்ற ஒரு பதத்தில் ஒருசேர உயர்த்திப்பிடித்த இன்னொரு மன்னனை காண்பது மிகக் கடினம் !

காலகாலங்களையெல்லாம் தாண்டி இந்த ஒரு கோயில் அழியாமல் நின்றதற்குக் காரணம் இராஜராஜன் என்கிற மாமன்னனின் மிக உயர்ந்த இந்த எண்ணம்தான் என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிடுவார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.

Thanks : Varalaaru.com

Sunday, September 21, 2008

mamallapuram


காலைக் கதிரின் கனிந்த தீண்டலிலும் மாலை மயங்கும் அந்தியின் தழுவலிலும் இரவில் பூக்கும் முழுமை நிலவின் குளிர்ந்த தடவலிலும் கடற்கரைக் கோயிலில் இருக்க நேர்ந்தால், கலையின் உயிர்ப்பைக் கண்களைப் போலவே உள்ளமும் பருகும். தொட்டும் அணைத்தும் தொலைவில் நின்றும் பேசியும் பேசாமலும் ஆசையாய்ப் பார்த்தால், இந்தக் கற்கட்டுமானங்களின் பின்னிருக்கும் கலைஞர்களின் கனவுக் கண்களைச் சந்திக்கலாம். அந்தக் கண்கள், கலைநீரோட்டத்தில் அழியாக் கவிதைகளாய் அவர்கள் அமைத்த படைப்புகளின் சமுதாயப் பின்புலத்தைக் காட்டுவதுடன், கலையில் கரைந்து கட்டுமானமெங்கும் பரவியிருக்கும் அவர்களின் ஆத்மாவையும் அடையாளப்படுத்தும். ஓயாது வந்து கரைமோதி உடையும் அலைகளும் இந்த இரகசிய செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆவலில்தானே பெருங்குரலெழுப்பிப் பேதலித்துத் திரும்புகின்றன!