
- இராஜராஜீசுவரம் விமானத்தின் நிழல் கோயில் வளாகத்திற்குள் விழாது
- தவறு. நாள்தோறும் விழுகிறது
- இராஜராஜீசுவரம் விமானத்தின் உச்சித்தளம் ஒரே கல்லால் ஆனது. அதன் எடை 80 டன்.
- தவறு. பல கற்களால் ஆனது.
- இராஜராஜீசுவரம் விமானத்தின் சிகரம் ஒரே கல்லால் ஆனது. அதன் எடை 80 டன்.
- தவறு. சிகரம் பல கற்களால் ஆனது
- தனக்கிருந்த கருங்குஷ்டம் நோய் சரியாவதற்காகவே இராஜராஜர் கோயில் கட்டினார்.
- தவறு. இராஜராஜருக்கு எந்த நோயும் இருந்ததாக வரலாறு கூறவில்லை
- இராஜராஜரின் குரு கருவூர்த்தேவர் துபிய வெற்றிலை எச்சிலால் இக்கோயில் இலிங்கம் நிலைநின்றது.
- தவறு. கருவூர்த் தேவருக்கும் இராஜராஜருக்கும் தொடர்பிருந்ததாக வரலாறு கூறவில்லை.
- ஓவியக் காட்சியில் இராஜராஜரும் அவர் குரு கருவூர்த்தேவரும் உள்ளனர்.
- தவறு. அக்காட்சியில் இருப்பவர்கள் அவர்கள் அல்லர். இராஜராஜருக்கும் கருவூர்த்தேவருக்குமோ, இராஜராஜருக்கும் கருவூராருக்குமோ தொடர்பிருந்ததாக எந்தத் தகுதியான சான்றும் யாராலும் இதுநாள்வரையிலும் முன்வைக்கப்படவில்லை
- இராஜராஜீசுவரம் விமானம் பொன் தகடுகளால் போர்த்தப்பட்டிருந்தது.
- தவறு. தகுதிவாய்ந்த சான்றுகள் ஏதும் இல்லை
- உடையாளூரில் இராஜராஜருக்குப் பள்ளிப்படை உள்ளது.
- தவறு. அங்கிருப்பது ஒரு கல்வெட்டு. அக்கல்வெட்டு இராஜராஜர் பெயரால் இருந்த கட்டமைப்புப் பற்றீ மட்டுமே கூறுகிறது
- இராஜராஜீசுவரம் விமானத்திலிருந்து குதித்து இராஜராஜர் தற்கொலை செய்து கொண்டார்.
- தவறு. சான்றுகள் இல்லை
****


இராஜராஜனின் மிகப் பிரபலமான நாம் குடுத்தனவும் கல்வெட்டைப் படித்தே ஆகவேண்டுமென்று ஒரு கோஷ்டி கொடியைப் பிடிக்க, மேற்குப் பகுதிக்குச் சென்றோம். அங்கே - கருவறையின் மட்டத்திற்கு சற்று கீழ் அழகாக வெட்டப்பட்டிருந்தது அந்த வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வெட்டு. இராஜராஜனின் மிக உத்தமமான மனதிற்கும் உயர்ந்த சிந்தனைக்கும் அந்த ஒரு கல்வெட்டு மட்டும் போதும்!
அந்தக் கல்வெட்டில் மன்னன் கீழ்க்கண்டவாறு சொல்கிறான் -
"நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும்...இந்தக் கல்லிலே வெட்டியருளுக என்று திருவாய்மொழிஞ்சருளி....."
அதாவது தட்சிண மேரு விடங்கர்க்கு யார் எந்தவிதமான காணிக்கை அல்லது நிவந்தம் செய்திருந்தாலும் - அது சிறியதோ பெரியதோ - கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிட வேண்டும் ! அவருடைய பதவி ஒரு பொருட்டல்ல, அவர் அரசனுக்கு அணுக்கமானவரா, இல்லையா என்பது பொருட்டல்ல, சோழவம்சத்தை சேர்ந்தவரா இல்லையா என்பதும் ஒரு பொருட்டல்ல - அவர் யாராயிருந்தாலும் சரி, இறைவனுக்கு காணிக்கை கொடுத்தவர் என்கிற அளவில் அவர் பெயரும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுவிட வேண்டும் - அவ்வளவுதான் !
நமது இந்திய வரலாற்றை தலைகீழாகப் புரட்டிப் பார்த்தாலும் இப்படி தன்னைச் சேர்ந்தவர்கள், தான் முனைந்த காரியத்திற்கு உறுதுணையாய் நின்றவர்கள் என்று அனைவரையும் "கொடுப்பார் கொடுத்தனவும்" என்ற ஒரு பதத்தில் ஒருசேர உயர்த்திப்பிடித்த இன்னொரு மன்னனை காண்பது மிகக் கடினம் !
காலகாலங்களையெல்லாம் தாண்டி இந்த ஒரு கோயில் அழியாமல் நின்றதற்குக் காரணம் இராஜராஜன் என்கிற மாமன்னனின் மிக உயர்ந்த இந்த எண்ணம்தான் என்று உணர்ச்சிபொங்கக் குறிப்பிடுவார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.
Thanks : Varalaaru.com
2 comments:
Hi Kirubaharan,
I came to know more abt this.......Thank you....
thodarnuthu enn pathivukalai padinga..
Post a Comment